BFH News
BUY JNEWS
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • Relationship
  • Consultations
  • Friendship
  • Singlehood
  • Counseling
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • Relationship
  • Consultations
  • Friendship
  • Singlehood
  • Counseling
BFH News
No Result
View All Result
Home Health Tips

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

Tamizharasan k by Tamizharasan k
May 25, 2025
in Health Tips
488 5
0
நகத்தின் நிறம் மாற காரணம்
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை நமது நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து கண்டு கொள்ளலாம். நுரையீரல், இதயம் என எங்கு பாதிப்பு இருந்தாலும் நகத்தை வைத்து எளிதில் அறியலாம். பொதுவாகவே, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்குமேயானால் நகத்தின் நிறம் மாறுகிறது. நகம் கெரட்டின் என்ற பொருளால் ஆனது. சுண்டுவிரல், கட்டைவிரல், ஆல்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் என அனைத்து விறல் நகமும் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புடன் தொடர்பு கொண்டுள்ளது.

Recommended Post

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

பரம்பரை நோய்கள்: உங்கள் உடலின் மரபியல் ரகசியங்கள்!

கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து நோய்களை கண்டறிதல்:

நகமானது மென்மையாகவும் சமமாகவும் இருக்கும். நகத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் எந்த நோயின் அறிகுறியாக இருக்கும் என பார்க்கலாம்.

வெள்ளை நகங்கள்:வெள்ளை நிற நகங்கள் கல்லீரல் ஈரல் அலர்ஜி, செரிமான கோளாறுகள், மைக்கோஸிஸ், வளர்ச்சிதை மாற்ற கோளாறுகள், நிமோனியா, கல்லீரல் பிரச்சனைகள் போன்ற நோய்களுக்கும் அறிகுறியாக இருக்கும். நமது நகங்களில் நடுவில் வெள்ளையாகவும் விளிம்பில் கருமையாகவும் இருப்பதற்கு கல்லீரல் நோய் தான் காரணம். நகம் நிறமில்லாமல் வெண்மையாக இருந்தால் ரத்த சோகைக்கான அறிகுறியாகும். நகத்தின் கீழ்ப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாகவும் மேல்பகுதியில் வழக்கம்போல இருந்தால் இதய செயலிழப்பு நோய் மற்றும் கல்லீரல் நோய் வர அறிகுறியாகும்.

மஞ்சள் நிற நகங்கள்: நமது நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் ஹைப்போதைராய்டிசம், நுரையீரல் நோய், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் மஞ்சள் காமாலை வருவதற்கான அறிகுறியாக இருக்கும். இதனுடன் நீரிழிவு நோய் இருந்தால் ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரையுடன் வினைபுரிந்து நகத்தை மஞ்சள் நிறமாக மாற்றும். மேலும், பூஞ்சை தொற்று காரணமாகவும் புகைப்பிடிப்பதாலும் மஞ்சள் நிறமாக நகம் இருக்கும். நமது உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புகளின் பற்றாக்குறையினாலும் கூட மஞ்சள் நிறமாக நகம் காணப்படுகிறது. ஒருசில நேரங்களில் சிறுநீரக நோய், எச்.ஐ.வி மற்றும் சொரியாசிஸாலும் நகம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அதேபோல், நகத்திற்கு அடிக்கடி நகப்பூச்சு போடுவதினாலும் ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு இந்த நகங்கள் ஒரு அறிகுறியாகும்.

லுனுலாவில் சிவப்பு புள்ளியுடைய நகம்:நம் கை நகத்திலுள்ள லுனுலா பகுதியில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவது சரும பிரச்சனையான சொரியாசிஸ் இருப்பதற்கான அறிகுறியாகும்.

நீல நிற நகங்கள்:நீல நிற நகங்கள் இருக்குமேயானால் நமக்கு இருதய நோய்கள், ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நம் நகத்தின் அடிப்பகுதியில் நீல நிறம் இருந்தால் இன்சுலின் குறைபாட்டின் காரணமாக சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கும். மேலும், வெள்ளை மற்றும் நீலம் சேர்ந்து நகம் தென்பட்டால் சீரற்ற ரத்த ஓட்டம் என அர்த்தம். அதாவது குறைந்த ரத்த அழுத்தம் அல்லது அதிக ரத்த அழுத்தம் ஏற்படும். இந்த நீல நிற நகங்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டால் கூட ஏற்படும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு இருந்தால் கெட்ட ரத்தமும் நல்ல ரத்தமும் ஒன்று சேர்ந்து இருப்பதற்கு அறிகுறியாக நீல நிறம் தோன்றும்.

பழுப்பு நிற நகங்கள்:நமது நகங்கள் பழுப்பு நிறத்தில் இருந்தால் அட்ரீனல் சுரப்பு சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

கருப்பு நிற நகங்கள்:கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக நோய், வைட்டமின் B12 பற்றாக்குறை, அதிக அளவில் பயந்து இருத்தல், ஒருவகை புற்றுநோய் ஆகியவற்றிற்கு அறிகுறியாக நகமானது கருப்பு நிறத்தில் மாறுகிறது.

நீளமான கோடுடைய நகங்கள்:இந்த நகங்கள் சாப்பிட்ட உணவில் செரிமானம் சரியாக ஆகாததால் இரைப்பை குழாயில் கோளாறுகள் ஏற்படுவதை குறிக்கிறது.

நகத்தின் விளிம்பில் வெள்ளை கோடு:
இந்த கோடுகள் நமது நகத்தில் ஏற்படுமேயானால் அவை ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தம் ஆகியவற்றை குறிக்கிறது. மேலும், உடலில் புரதத்தின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த கோடுகள் வருகின்றன.

குவிந்த நகங்கள்:இந்த நகங்கள் நுரையீரல் நோய்கள், இதயம் மற்றும் தைராய்டினால் ஏற்படும் பாதிப்பினை குறிக்கின்றது. இவை, குறிப்பாக சுவாச பிரச்சனையால் ஏற்படும் நோய்களுக்கு அறிகுறியாக உள்ளது.

கோடுகளுடைய நகம்:நமது நகத்தில் செங்குத்தாக மற்றும் நீளமாக கோடுகள் காணப்பட்டால் இவை மூட்டு வலிக்கான அறிகுறியாக உள்ளது. இந்த கோடுகள் கையால் தொடும்பொழுது உணரப்படுகிறது. இவை பொதுவாக அதிக காய்ச்சல் அல்லது கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு ஏற்படும். மெலனோமா எனப்படும் ஒரு வகை புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாக இந்த நகம் இருக்கும்.

பிளவுபட்ட நகங்கள்:தைராய்டு நோய்க்கான அறிகுறிகளில் ஒன்று நகம் பிளவு பட்டு காணப்படுதல். நகம் பிளவுபட்டு காணப்பட்டால் உடனே தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. போதிய ஊட்டச்சத்து உடம்பில் இல்லாததாலும் கூட நகங்கள் பிளவுபட்டு காணப்படும்.

கருப்பு கோடுடைய நகங்கள்:நம் கைவிரல் நகங்களில் கருப்பு நிற கோடுகள் இருப்பது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். இதிலும் குறிப்பாக மெலனோமா என்ற சரும புற்றுநோய் வருவதற்க்கான அறிகுறியாக இந்த கோடுகள் உள்ளன. மேலும் சோர்வு, சோரியாசிஸ், இதய பிரச்சனைகளுக்கு அறிகுறியாக நகம் கருப்பு கோடுடன் காணப்படும்.

குழியுடன் இருக்கும் நகங்கள்:நமது நகத்தில் சிறிய குழிகளாக அல்லது குழிக்குள் புதைந்தது போல இருந்தால் அவை கீல்வாதத்திற்கான அறிகுறியே ஆகும். மேலும், இது ஆரம்பத்தில் சின்ன சின்ன குழியாக வந்து அதில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்து இறுதியில் சொரியாசிஸாக மாறுவது கூட குழியுள்ள நகத்தை வைத்து கண்டு கொள்ளலாம். நம் உடலில் இரும்புசத்து குறைபாடு, ரத்த உறைவு, பூஞ்சை தோல் நோய் ஏற்பட்டுள்ளதை இது குறிக்கிறது. மேலும், இந்த குழிவான நகங்கள் ரத்த சோகையினாலும் வருகிறது.

வெள்ளை கோடுடைய நகங்கள்:நமது உடலில் போதிய அளவு கால்சியம், புரதம் இல்லாததால் நகங்களின் மீது மெல்லிய கோடு வருகிறது. இவை பூஞ்சை தொற்றாலும் கூட வருகிறது. மேலும், இவை சிறிது நாட்களில் தானாகவே சரியாகி விடும்.

பிரிக்கப்பட்ட நகங்கள்:நம் நகங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பிரிந்து இருப்பது போல இருந்தால் நமது உடலில் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிக அளவில் உள்ளது என அர்த்தம்.

வெள்ளை புள்ளியுடைய நகம்:ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால் இந்த புள்ளிகள் நகத்தில் வருகிறது. உடலில் போதுமான அளவு கால்சியம், இரும்பு, துத்தநாகம் இல்லாததை இவை காட்டுகின்றன.

வரிகளுடன் இருக்கும் நகங்கள்:நம் நகமானது வரிகளுடன் காணப்பட்டால் அதற்கு தைராய்டு பாதிப்பு, சிறுநீரக கோளாறுகள், மனஅழுத்தம் ஆகியவை காரணமாக இருக்கலாம். மேலும் இந்த வரிகளானது வயதாகும் பொழுது அதிகம் வருகின்றன.

வளைந்த நகங்கள்:நமது விறல் நகங்களின் நுனி பகுதி வளைந்து காணப்படுவது ஹீமோகுரோமடோஸிஸின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதற்கு காரணம் நம் உடலில் தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரும்புச்சத்து இருப்பதே ஆகும். மேலும் நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் இவை ஒரு அறிகுறியாகும்.

வீங்கிய நகங்கள்:கைவிரல் நகமானது வீங்கி சிவப்பு நிறமாக காணப்படுகிறது. இவை செரிமான கோளாறுகள், இணைப்பு திசு நோய்கள், இதய கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு அறிகுறியாக உள்ளது.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Previous Post

3 Ways to Make Date Night For Your Relationship

Related Posts

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

May 25, 2025
பரம்பரை நோய்கள்

பரம்பரை நோய்கள்: உங்கள் உடலின் மரபியல் ரகசியங்கள்!

June 6, 2025
"Create a realistic illustration showing a person with visible dark circles under their eyes. The focus should be on the face, especially the tired-looking eyes with prominent under-eye darkness. Include subtle signs of fatigue such as puffy eyes, dull skin, or slightly drooped eyelids. Next to the person, display natural remedies like cucumber slices, aloe vera gel, rose water, and a bowl of cold green tea bags to visually suggest home treatments. The setting should feel calm and home-like, using soft lighting and neutral tones. No words or labels in the image—only clear visuals

கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

May 25, 2025
ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

May 25, 2025
கடலை மாவின் அழகு அதிசயங்கள்

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

May 25, 2025
வயிற்று வலி

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

June 7, 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Top Stories

நகத்தின் நிறம் மாற காரணம்

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025

3 Ways to Make Date Night For Your Relationship

May 9, 2025

When Pain Masquerades Crazy in Relationships

May 8, 2025

News & More

Categories

  • Counseling
  • Consultations
  • Relationship
  • Friendship
  • Singlehood

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Connect on Social

© 2019 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
  • Relationship
  • Consultations
  • Friendship
  • Singlehood
  • Counseling

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In