நமது உடலிற்கு வரும் நோய்கள் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்கும். ஏனெனில், நோய்கள் ஏற்பட நாம் ஒரு காரணமாக இருப்பது போல் நமது மரபணுக்களும் ஒரு காரணமாக உள்ளது. இந்த வகையில் பரம்பரை நோய்கள் நமக்கு ஏற்பட நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. பரம்பரை நோய்கள் மிக குறைந்த அளவிலே வருகின்றன. இந்த நோய்கள் நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியவர்களிடம் இருந்து நமக்கு வருகின்றது. அதிலும், குறிப்பாக அப்பா மற்றும் அம்மாவில் இருந்து வருகிறது. ஏனெனில், நம் அம்மா மற்றும் அப்பாவின் ஜீன்களின் வழியாக தான் நாம் உருவாகி கருவாக வளர்ந்து பிறக்கின்றோம். எனவே, அவர்களின் ஒருசில பண்புகளுடன் பிறந்து வளர்கிறோம். உதாரணமாக, அம்மா அல்லது அப்பாவை போல கண், காது, நகம், மூக்கு, முடி, சிரிப்பு என பலவற்றை கூறலாம்.
Table of Contents
பரம்பரை நோய் என்பது என்ன:
பரம்பரை நோய் என்பது குறைபாடுள்ள மரபணுக்களின் மூலம் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்துவது ஆகும். இவை, ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வரும். அனைத்து பரம்பரை நோய்களையும் மரபணு நோய்கள் என கூறலாம். ஆனால், மரபணு சார்ந்து வரும் அனைத்து நோய்களும் பரம்பரை நோயாக இருக்கனும் என அவசியம் இல்லை. நமக்கு வரும் நோயை பொறுத்தே பெற்றோர்களின் மரபணுக்கள் நம்மில் எவ்வாறு செயல்படுகின்றன என அறியலாம்.
பரம்பரை நோய் எதனால் வருகிறது:
இவை நமது சுற்றுச்சூழல் மற்றும் வாழ்கை முறை காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றங்களால் தலைமுறை தலைமுறையாக கடந்து நமது வாழ்க்கையை பாதிக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அவை தாயின் ஒரு பகுதியையும் தந்தையின் ஒரு பகுதியையும் பெறுகிறது. இவற்றின் மரபணுக்கள் ஒன்றுக்கு ஒன்று சமமாக காணப்படும். நாம் கருவில் உருவாகும் பொழுதே நமது தாய் மற்றும் தந்தையின் பண்புகள் மற்றும் உடலமைப்பு, அம்மா உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு, மகிழ்ச்சி இன்மை, மனஅழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் இவை குரோமோசோம் வழியாக கடத்தப்பட்டு பரம்பரை நோய்களை ஏற்படுத்துகிறது. அதேபோல், நமது குரோமோசோம் அல்லது ஜீனில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் கூட ஒருசில நேரங்களில் பரம்பரை நோய் வர காரணமாக உள்ளது.
பரம்பரை நோய்கள்:
நமது மரபணுவில் மற்றும் DNAவில் ஏற்படும் மாற்றங்களில் ஒருசில பரம்பரையாக வருகின்றன. நமக்கு எந்தெந்த நோய்கள் வம்சாவளியாக வருகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.
- சர்க்கரை நோய்: சர்க்கரை நோயானது நமது குடும்ப சரித்திரத்தில் யாருக்காவது இருந்தால் நமக்கு வர நிறைய வாய்ப்புகள் உள்ளது. இவை 25 வயதிலிருந்து வர ஆரம்பிக்கிறது. இதில் மிகவும் குறிப்பாக வகை-1 சர்க்கரை வியாதி பரம்பரை பரம்பரையாக வருகிறது. இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிப்பது சிறந்தது.
- ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய பங்கு வகிப்பது மரபணுக்கள் ஆகும். நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்குமேயானால் நமக்கும் வர நிறைய வாய்ப்புகள் உள்ளது.
- சொட்டை விழுதல்: இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் சொட்டை விழுவதால் கவலைக்கு ஆளாகின்றனர். இது பரம்பரை வழியாக வரும் என்றால் ஆச்சரியமாக உள்ளது. இவை அப்பாவிடம் இருந்து நமக்கு வருவதில்லை மாறாக அம்மாவிடம் இருந்தே வருகிறது. நம் அம்மாவின் குரோமோசோமில் இருந்து வரும் ஒரு ஜீன் தான் சொட்டை விழுவதற்கு ஒரு காரணமாக உள்ளது.
- மூட்டு வலி: நமது தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டிக்கு மூட்டு வலி இருந்தால் அவை நமக்கும் வர 70% வாய்ப்புகள் உள்ளது.
- மனஅழுத்தம்: மனஅழுத்தம் என்பதும் ஒரு வியாதி தான். நம் குடும்ப வரலாற்றில் யாருக்கேனும் மனஅழுத்தம் இருந்தால் நமக்கும் வர 20% வாய்ப்புகள் உள்ளது. மனஅழுத்தம் வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மது அருந்துதலையும் புகை பிடித்தபையும் தவிர்த்து, மகிழ்ச்சியாக இருந்து பழக வேண்டும்.
- புற்றுநோய்கள்: நாம் கருவில் உருவாகும் பொழுது ஏற்படும் பிறழ்வு காரணமாக பரம்பரையாக புற்றுநோய்கள் வருகின்றன. குறைபாடுள்ள ஜீன்களை சுமக்கும் பெண்களுக்கு மிக இளம் வயதிலே புற்றுநோய்கள் வருகின்றன. பரம்பரையாக வரும் புற்றுநோய்கள் பொதுவாக மார்பகம், கருப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்கள் தலைமுறையாக வருகிறது. இதிலும் அதிக அளவில் மார்பக புற்றுநோய் வருகின்றன. மார்பக புற்றுநோய் கொண்ட குடும்ப வரலாற்றை உடையவர்களுக்கு அதிகம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதால் இவர்கள் மரபணு பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.
- உணவு அலர்ஜி: நம்மில் ஒருசிலருக்கு உணவு சாப்பிட்டால் ஒத்துக்காமல் போவது பரம்பரை வழியாக வரும். இவை பெற்றோர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பால், கோதுமை, கீரை, பழங்கள், காய்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்பட்டால் அவை அவர்களின் சந்ததியினருக்கும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- ஹண்டிங்டன் நோய்: ஹண்டிங்டன் நோயானது பரம்பரை வழியாகவும் நடுத்தர வயதினருக்கும் வர வாய்ப்புள்ளது. இவை மரபணு மாற்றத்தின் மூலம் மூளையில் உள்ள நரம்பு செல்களை உடைத்து மூளை மற்றும் தசையின் செயல்பாட்டில் சீரழிவை ஏற்படுத்துகிறது. இந்த நோய் பரம்பரையாக நமக்கு வர 50% வாய்ப்புகள் உள்ளது.
- இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள்: மரபு வழியாக வரும் ரத்தநாள நோய்கள் நேரடியாக இதய ரத்த தமனியையும் பெருமூளை தமனியையும் பாதிக்கிறது. நம் தாய் அல்லது தந்தைக்கு மாரடைப்பு, இதய நோய்கள் இருக்குமேயானால் இவை நமக்கும் வர 30% வாய்ப்புகள் உள்ளது.
- ஒற்றை தலைவலி: தலைவலியும் பரம்பரை பரம்பரையாக நீடிக்கிறது. அதாவது குறைபாடுள்ள மரபணுவானது தொடர்ந்து பரம்பரையில் உள்ளவர்களையும் பாதிக்க 75% சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இந்த ஒற்றை தலைவலி நமது அம்மாவிடம் இருந்தால் நமக்கும் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்க சிட்ரஸ் பழங்கள், சாக்லேட், பாலாடைக்கட்டி, காபி போன்ற ஒற்றை தலைவலியை தூண்டும் பொருட்களை சாப்பிடாமல் தவிர்க்கவும்.
- நிறக்குருட்டுத்தன்மை: நம் மரபணுவில் ஏற்படும் மாற்றமானது சரியான வண்ணத்தை பார்க்காமல் போதல் போன்ற குறைபாட்டை ஒருவருக்கு பிறவியில் இருந்தோ அல்லது பாதியிலோ ஏற்படுத்துகிறது.
- மாதவிடாய் நிறுத்தம்: பொதுவாகவே மாதவிடாய் நிறுத்தம் 50 வயதிற்கு மேல் ஏற்படும். ஆனால், பரம்பரையாக இவை வருமேயானால் 42 வயதிற்கு மேலே வர ஆரம்பிக்கிறது.நமது தாயாருக்கு மாதவிடாய் நிறுத்தம் விரைவில் ஏற்படுமேயானால் நமக்கும் 70% வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இதனை நம்மால் சரிசெய்ய முடியாது. எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
- மார்பன் நோய்க்குறி: மார்பன் நோய்க்குறியானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பல சிக்கல்கலை உருவாக்குகிறது. மரபணு நோய்குறியில் மரபணு மாற்றமானது இணைப்பு திசுக்களை பாதிக்கிறது. இது இதயம், கண்கள், எலும்பு, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயின் விளைவாக ரத்த அழுத்தம் குறைவதால் ரத்த நாளங்களில் திரிபு ஏற்பட்டு இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தும்.
- சிஸ்டிக் பைப்ரோசிஸ்: மரபணு மாற்றமானது நமது உடலில் வியர்வை, சளி மற்றும் செரிமான சாறுகளை உற்பத்தி செய்யும் செல்களை பாதிக்கிறது. இப்படி வரும் திரவமானது ஓட்டும் தன்மையுடனும் சுவாசத்தில் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
- காது கேளாமை: நமது தாய் அல்லது தந்தைக்கு காது கேளாமை பிரச்சனை இருந்தால் நமக்கும் அதே பாதிப்பு வர நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளது.
- ஆஸ்துமா: ஆஸ்துமா எனப்படும் சுவாச பிரச்சனை நமது குடும்ப வரலாற்றை அடிப்படையாக கொண்டு நமக்கும் வர 20% வாய்ப்புகள் உள்ளது.
- உடல் பருமன்: நாம் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்தாலும் நமது உடல் எடை குறையாது. மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் தான் நமது உடலில் உள்ள கொழுப்பை செரித்து ரத்த குழாயில் தங்கிவிடுகிறது. இது பரம்பரை வழியாக வர 60% வாய்ப்புகள் உள்ளது.
- அல்சைமர்: இந்த அல்சைமர் நோயும் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது. இது ஒரு வகை மரதி நோய் ஆகும். நமது தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் நமக்கு வர சாத்தியக்கூறுகள் 40% வரை உள்ளன. இதனை ரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுக்குள் வைப்பதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்கை முறையை கடைபிடிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தி டிமென்ஷியா என்ற மனப்பாதிப்பு நோய் ஏற்படுவதை தடுக்க முடியும்.
- ஹீமோகுரோமடோசிஸ்: நாம் உண்ணும் உணவு மற்றும் பானங்களில் இருந்து அதிகப்படியான இரும்பு சத்து உடல் உரிய மரபணுவில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணம். அதிக அளவு இரும்பு சத்து சேமிக்கப்படுவதால் நமது உடலில் கணையம், இதயம் மற்றும் கல்லீரலில் ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன.
- அறிவால் செல் அனீமியா: ஹீமோகுளோபினில் புரதத்தை குறியாக்கம் செய்யும் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் பிளர்ந்த குரோமோசோம்கலுடன் இருக்கும் ரத்த சிவப்பு அணுக்களை அருவாள் வடிவமாக மாற்றுகிறது. இதனால் ரத்த நாளங்கள் சீராக செயல்படாமல் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
- தலசீமியா: இதில் ஏற்படும் மரபணு மாற்றம் ஹீமோகுளோபின் உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதனால், நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதன் காரணமாகவே ஆக்ஸிஜன் நிறைந்த ரத்த செல்கள் உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையாமல் இறுதியில் இறக்கின்றன.
மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.