BFH News
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • recipe

    Raspberry Mint Lemonade Recipe

    New Recipe Pasta with Creamy Kale Sauce

    Spicy Crispy Pomegranate Chicken

    Fresh Vegan Granola Bites Recipe

    Mediterranean Rice Bowls with Red Pepper Sauce

    Caramelized Pear Chocolate Cake

  • Street Food

    Mushroom Pasta with Melted Cheese

    Balinese Street Foods You Need to Try

    Cofeeto: A Mint Mojito with Coffee

    Easy Summer Refreshing Cocktail

  • Drink

    Raspberry Mint Lemonade Recipe

    New Recipe Pasta with Creamy Kale Sauce

    Spicy Crispy Pomegranate Chicken

    Steak & Baso Butter Lobster Sandwich

    Fresh Vegan Granola Bites Recipe

    Mediterranean Rice Bowls with Red Pepper Sauce

    Balinese Street Foods You Need to Try

    Easy Summer Refreshing Cocktail

    Japanese Coconut Curry Braised Pork Thighs

  • Restaurant
  • Travel
  • About
  • Contact
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • recipe

    Raspberry Mint Lemonade Recipe

    New Recipe Pasta with Creamy Kale Sauce

    Spicy Crispy Pomegranate Chicken

    Fresh Vegan Granola Bites Recipe

    Mediterranean Rice Bowls with Red Pepper Sauce

    Caramelized Pear Chocolate Cake

  • Street Food

    Mushroom Pasta with Melted Cheese

    Balinese Street Foods You Need to Try

    Cofeeto: A Mint Mojito with Coffee

    Easy Summer Refreshing Cocktail

  • Drink

    Raspberry Mint Lemonade Recipe

    New Recipe Pasta with Creamy Kale Sauce

    Spicy Crispy Pomegranate Chicken

    Steak & Baso Butter Lobster Sandwich

    Fresh Vegan Granola Bites Recipe

    Mediterranean Rice Bowls with Red Pepper Sauce

    Balinese Street Foods You Need to Try

    Easy Summer Refreshing Cocktail

    Japanese Coconut Curry Braised Pork Thighs

  • Restaurant
  • Travel
  • About
  • Contact
No Result
View All Result
BFH News
No Result
View All Result
Home Health Tips

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

by Tamizharasan k
June 7, 2025
in Health Tips
488 5
0
வயிற்று வலி
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு குடல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகள் உள்ளன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட வயிற்று வலி வருகிறது. நமது உடல் ஆரோக்கியத்தில் வயிறே மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அடிப்படையில் தான் உடலில் பிரச்சனைகள் வருகின்றன.

இன்றைய வளர்ந்து வரும் கால கட்டத்தில் நாம் அனைவரும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றுதல் மற்றும் வாழ்கை முறை ஆகியவற்றால் வயிற்று வலியை அனுபவிக்கிறோம். அதிலும் அதிகப்படியான நொறுக்குத்தீனி சாப்பிடுதல், அஜீரணம், வயிற்று வாயு, குறைந்த அளவு தண்ணீர் பருகுவதாலும் வயிற்று வலி ஏற்படுகிறது. வயிற்று வலியானது பெரும்பாலான நேரங்களில் தீங்கு விளைவிப்பவை அல்ல.

இவை ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனையின் அறிகுறியாகவவே வரும். எப்பொழுதாவது தான் வலி தாங்க முடியாமல் இருக்கும். வயிற்று வலியானது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் வருகிறது. வயிற்றி வலியானது சில நேரங்களில் லேசானதாகவும் அல்லது தீவிரமாகவும் இருக்கும். இப்படி ஏற்படும் வயிற்று வலியை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் குடலை பாதித்து குடல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வயிற்று வலியினை மருத்துவ முறையில் டிஸ்பெப்ஸியா என்று அழைக்கப்படுகிறது.

Table of Contents

  • வயிற்று வலியின் வகைகள்:
  • வயிற்று வழியில் காரணங்கள்:
  • வயிற்று வலியின் அறிகுறிகள்:
  • வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்:
  • செய்ய வேண்டியவை:

வயிற்று வலியின் வகைகள்:

  • வயிற்று வலியானது அதன் தீவிரம் மற்றும் காலத்தை பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
  • மோசமான வயிற்று வலி: வாயு, மலச்சிக்கல் அல்லது வீக்கம் காரணமாக வயிற்றில் தசைப்பிடிப்பு அல்லது அசௌகரியம் ஏற்படும்.
  • நாள்பட்ட வயிற்று வலி: இந்த வலியானது மீண்டும் மீண்டும் வரும். வலியானது மூன்று மாதங்கள் அல்லது அதற்க்கு மேலேயும் நீடிக்கும்.
  • பொதுவான வயிற்று வலி: அடிவயிற்றில் முழுவதும் பரவலாக வலி ஏற்படும். எந்த இடத்தில வலி தோன்றும் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது.
  • உள்ளூர் வயிற்று வலி: உள்ளூர் வலியானது வயிற்றின் ஏதேனும் ஒரு பகுதியையே கட்டுப்படுத்துகிறது.

வயிற்று வழியில் காரணங்கள்:

வயிற்று வலிக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுதான் சரியான காரணம் என்று கண்டு பிடிப்பதே கடினமே.

  • உணவு விஷம்: அசுத்தமான உணவு மற்றும் பானங்களை உண்பதால் வயிற்று வலி ஏற்படும்.
  • மாதவிடாய் தசை பிடிப்பு: பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் மாதவிலக்கு காலத்திலும் வயிற்று வலி ஏற்படும்.
  • மலசிச்சிக்கல்: மலச்சிக்கல் ஏற்படுவதற்கு மலம் இறுகி போவதே காரணமாகும். இதனால், சீராக மலம் கழிக்க முடிவதில்லை. எனவே, அப்பொழுது வயிற்று வலி ஏற்படும்.
  • புண்கள்: வயிற்றில் புண்கள், சிறுகுடல் அல்லது வயிற்றின் சுவர்களில் உருவாகும். இவை பொதுவாகவே மனஅழுத்தம் மற்றும் சில மருந்துகளினால் எற்படும் தொற்றால் உருவாகிறது.
  • வயிற்றுப்போக்கு: தொடர்ந்து தண்ணீர் போன்ற பேதி போகிறது. நமக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உடல் பலவீனமாகும்.
  • கணைய அலர்ஜி: கணைய அலர்ஜி என்பது கணையத்தில் ஏற்படும் வீக்கமே ஆகும். இது கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.
  • மலச்சிக்கல்: நமது குடலில் அதிக அளவு கழிவு சேரும்போது நமது குடலில் அழுத்தம் அதிகரித்து வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.
  • கிரோன் நோய்: செரிமான மண்டலத்தின் புறனி வீக்கமடைந்து வாயு, வயிற்றுவலி, வயிற்றுப்பூச்சி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துவதை கிரோன் நோய் என்கிறோம்.
  • துரித மற்றும் காரமான உணவுகளை உண்பது, வயிறு உப்புசம், விக்கல், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல், முதுமை பருவம், குடலிறக்கம், சாதாரண வளர்ச்சிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்லக்ஸ் நோய், சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று, குடல் கோளாறுகள், இரைப்பை குடல் அலர்ஜி, தொற்று நோய்கள், நீர்கட்டிகள், பித்தப்பை கற்கள், ஒவ்வாமை, அஜீரணம், வாந்தி, மனஅழுத்தம், அதிகப்படியாகவோ அல்லது வேகமாகவோ சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களாலும் வயிற்று வலி ஏற்படும்.

வயிற்று வலியின் அறிகுறிகள்:

  • கடுமையான வலி: எரிச்சலூட்டும் குடல் அலர்ஜி, லாக்டோஸை உடல் ஏற்காமை மற்றும் வயிறில் ஏற்படும் வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் வயிற்றில் கடினமான வலி ஏற்படுகிறது.
  • அடிவயிற்றில் வீக்கம்: நமது வயிறானது இயல்பை விட பெரியதாக காணப்படும். இவை சங்கடத்தை ஏற்படுத்தும் வயிறு உப்பசமாக இருப்பதால் ஏற்படுகிறது.
  • வாந்தி மற்றும் குமட்டல்: தொடர்ந்தோ அல்லது இடைவெளி விட்டு விட்டோ வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு ஏற்படும். இவை நாள்பட்ட வயிற்று வலியால் ஏற்படும்.
  • வயிற்றுப்போக்கு: தொடர்ந்து தண்ணீர் போன்ற வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • மலத்தில் ரத்தம் கலந்திருத்தல்: மூலநோய், ஆசனவாய் பிளவுகள் போன்ற பல்வேறு நோய்களின் காரணமாக மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதுவும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
  • பசியின்மை: எப்பொழுதும் வயிற்று வலி ஏற்படுவதால் எதையும் சாப்பிட மனம் ஏற்காது. இவர்கள் பொதுவாகவே சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.
  • எப்பொழுதும் சோர்வாக காணப்படுதல், நீரிழப்பு, ஏப்பம் விடுதல், வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், வாய்வு, மார்பு அசௌகரியம் போன்றவை வயிற்று வலிக்கான அறிகுறிகளாகும்.

வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியம்:

வயிற்று வலியானது பல்வேறு காரணமாக வருகிறது. வயிற்று வலியால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களே போதும்.

  1. இஞ்சி: குமட்டல் எதிர்ப்பு பண்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் உள்ளன. இது வயிற்று வலியை இயற்கையாக குறைகிறது. இதனை சமையலிலோ, பச்சையாகவோ அல்லது தேநீரிலோ கலந்து உபயோகிக்கலாம். இதனால் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியமும் மேம்படும்.
  2. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் ஜீரண சக்தி அதிக அளவில் உள்ளதால் இவை வயிற்று வலி வரமால் தடுக்கும்.
  3. எலுமிச்ச்சை: அஜீரணத்தை தடுக்க எலுமிச்சை பெரிதும் உதவுகிறது. நமது வயிற்றில் அசௌகரியம் ஏற்படும்போது எலுமிச்சை நீரை குடிப்பதால் நிவாரணம் பெறலாம்.
  4. வெந்தயம்: வயிற்று வலியை போக்க வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. வெந்தயத்தை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது வெந்தயத்தை தண்ணீரில் ஊர வைத்து வெந்தயத்துடன் தண்ணீரையும் சேர்த்து குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.
  5. ஓமம்: சிறிதளவு ஓம தண்ணீரை குடிப்பதன் மூலம் வயிற்று வலி குறையும்.
  6. புதினா: புதினாவின் மென்தோல் உள்ளது. இது ஜீரண பிரச்சனைகளை குறைக்கவும் வயிற்றை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சில புதினா இலைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர், இதனை வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடிக்கவும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வதன்மூலம் வயிற்று வலி மற்றும் வாயு விரைவில் குணமாகும்.
  7. பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொள்கிறது. ஒரு கப் தேநீரில் பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு பிறகு இதனை வடிகட்டி குடிக்கவும்.
  8. பெருங்காயம்: நாம் செய்யும் சமையலில் ருசிக்காக பயன்படுத்தும் பெருங்காயம் பல்வேறு உடல் ஆரோக்கியங்களை கொடுக்கிறது. இதில் உள்ள ஹைப்போடென்சிவ் ஆண்டிஹெல்மின்டிங் வீக்க எதிர்ப்பு பண்புகள் போன்றவற்றால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை அளவு பெருங்காய தூளை சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிப்பதன் மூலம் வயிற்று வலி விரைவில் குணமாகும்.
  9. இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை உண்ணும் உணவை எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது. வயிற்று வலி உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை உணவில் சேர்த்து கொள்வதால் வயிற்று வலி குறையும்.
  10. பப்பாளி: வயிற்று வலியை போக்க பப்பாளி பெரிதும் உதவுகிறது. இவை உடல் சூட்டை தணிக்கிறது. பப்பாளி சாப்பிடுவதால் ஜீரணம் எளிதில் ஆவதோடு செரிமானமும் விரைவில் ஏற்படுகிறது.
  11. ஆளி விதை: ஆளி விதையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. ஆளி விதைகள் பொதுவாகவே வயிற்றை சுத்தமாக்கவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதனை அப்படியே அல்லது ஆளி விதை எண்ணெய் ஆகவோ உட்கொள்வது வயிற்று வழியை நீக்கும்.
  12. வெள்ளை சாதம்: நம் வயிறானது மேலோங்கி இருக்கும்போது துரித உணவு சாப்பிடுவதை தவிர்த்து சாதம், டோஸ்ட் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் வெள்ளை அரிசியானது உணவு திரவங்களை உறிஞ்சி மலத்தின் வழியாக கழிவுகளை நீக்குகிறது. இதனால் வயிறு வலி மற்றும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
  13. அதிமதுரம்: அதிமதுரத்தில் உள்ள சூடான தன்மை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இவை குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலையு குறைத்து வயிற்று வழியை நீக்குகிறது.
  14. துளசி: துளசியில் இயற்கையாகவே மருத்துவ குணம் அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு சில துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்கு மெல்லுவதன் மூலம் வயிற்று வலி குறைகிறது.
  15. புளித்த உணவுகள்: புளித்த உணவுகளான தயிர், கீரை ஆகியவற்றை உண்பது வயிற்று வலியை குறைக்கும்.
  16. கற்றாழை: கற்றாழையில் அதிக அளவு குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிற்று வலி வராமல் தடுக்கலாம்.
  17. தேங்காய் தண்ணீர்: தேங்காய் தண்ணீரானது வயிற்று வலி, அல்சர் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தேங்காய் தண்ணீரில் இயற்கையாக உடலிற்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

செய்ய வேண்டியவை:

  • நமக்கு ஏற்படும் வயிற்று வலியை எல்லா நேரத்திலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில், இவை உடலின் பல்வேறு பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம். வயிற்று வலியை போக்க ஒரு சில விசியத்தை நாம் கடைபிடிப்பது அவசியமானது.
  • துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • குறைந்த அளவிலான உணவை உண்பது செரிமானத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் வயிற்று வலியை வராமல் தடுக்கும்.
  • புகை பிடித்தலை தவிர்க்கவும்.
  • நம் வயிற்றில் சூடான துணி அல்லது ஹீட்டிங் பேட் கொண்டு நன்றாக கதகதப்பினை அளிக்கவும்.
  • வெண்ணீர் குளிப்பது வயிற்று வலியை குறைக்கும்.
  • நம் உடலில் ஏற்படும் நீரிழப்பின் காரணமாக கூட வயிற்று வலி ஏற்படும். எனவே உடலிற்கு போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
  • மது அருந்துதலை தவிர்க்கவும்.
  • உடலிற்கு ஓய்வு கொடுக்கவும்.
  • நம் ஒருசில உடற்பயிற்சி செய்வதன் மூலம் செரிமானம் விரைவில் நடைபெற்று வயிற்று வலியை குறைக்கும்.
  • தூங்கும்போது நமது வசதிக்கேற்ப இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ திரும்பி படுத்தால் வாயு குறையும்.
  • நம் உணவு சாப்பிட்ட பிறகு அண்ணார்ந்து பார்த்து தூங்குவதை தவிர்க்கவும். மாறாக சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து தூங்குவது நல்லது.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Previous Post

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

Next Post

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

Tamizharasan k

Tamizharasan k

Next Post
கடலை மாவின் அழகு அதிசயங்கள்

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular

    Navigate

    • Home
    • Recipe
    • About
    • Archives
    • Contact

    Recent Recipes

    நகத்தின் நிறம் மாற காரணம்

    நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

    May 25, 2025

    Raspberry Mint Lemonade Recipe

    May 9, 2025

    Browse by Category

    • Breakfast
    • Dinner
    • Drink
    • Health Tips
    • Recipe
    • Restaurant
    • Street Food
    • Vegetarian

    Browse by Ingredients

    Bakery Brunch Cafe Cake Chicken Coffee Gluten Free Mint Raspberry Red Pepper Rice Vegan

    © 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
      • Home – Layout 1
      • Home – Layout 2
      • Home – Layout 3
      • Home – Layout 4
      • Home – Layout 5
    • recipe
    • Street Food
    • Drink
    • Restaurant
    • Travel
    • About
    • Contact

    © 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In