சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் வேண்டுமா? அப்போ இதோ உங்களுக்கான தீர்வு

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் என்பது பலருக்கும் தேவைப்படும் ஒரு இயற்கை தீர்வாகும். சளி என்பது மெல்லிய ஓட்டும் படலம் போல காணப்படும். இது சுவாசக்குழாயில் மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள சுரப்பிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சளி உடலில் தேவையானதாக இருந்தாலும், அதிகமாக உருவாகும்போது தொந்தரவாக முடியும். இயற்கை வழிகளில் சளியை கரைக்க பல மூலிகைகள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

சளியானது பாக்டீரியா, தூசி, வைரஸ் போன்றவை நாம் சுவாசிக்கும்போது காற்றோடு சேர்ந்து நுரையீரலுக்கு உள்ளே சென்று விடாமல் தடுத்து ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. சளியின் பிசுபிசுப்பு தன்மை காரணமாகவே இது நடைபெறுகிறது.

நம் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்போதே சளியை சுரந்துகொண்டே இருக்கும். கிட்டத்தட்ட நமது உடல் ஒரு லிட்டர் அளவிற்கு சளியை ஒரு நாளில் உற்பத்தி செய்யும். நமது உடலில் தேவையற்ற கழிவுகளின் வெளியேற்றமே சளி என கருதப்படுகிறது.

உடலிற்கு சளி என்பது இன்றியமையாத ஒன்றாகும். சளியின் சமநிலை அதிகரிக்கும்போது சளியின் சமநிலை தவறி சளி அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. சளியின் வேலையே சுவாச மண்டலம் வறண்டு விடாமல் தடுப்பதும் சுத்தமான காற்றை மட்டுமே நுரையீரலுக்கு அனுப்புவதும் ஆகும்.

குளிர்காலத்தில் வெப்பநிலையானது குறைவாக உள்ளதால் எளிதில் நமக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு சளி பரவுகிறது. சளியானது அளவாக இருக்கும்போது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், அளவுக்கு அதிகமாக போனால் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

சளியின் வகைகள்:

நம்மில் இருந்து வெளியேறும் சளியின் நிறத்தை பொறுத்து சளி வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சளியின் வகைகள்

தெளிவான சளி:சளியானது எந்த நிறமும் இல்லாமல் தெளிவாக காணப்பட்டால் சாதாரணமானதே ஆகும். இவை தினசரி உருவாகின்றன மற்றும் இது உடல் ஆரோக்கியமாக இருப்பதாக குறிக்கிறது.

வெள்ளை சளி: வெள்ளை சளியானது நெஞ்சு எரிச்சலின் காரணமாக உருவாகிறது. பொதுவாகவே சளியால் பாதிக்கப்படும்போது வெள்ளை நிற சளி ஏற்படும்.

பச்சை சளி: நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு முழு சக்தியுடன் தொற்றுக்களை எதிர்த்து போராடினால் பச்சை நிற சளி வரும். இதனால் வெளியேறும் சளியானது தடினமாகவும் உடல்நிலை சரியில்லை என்பதற்கு அறிகுறியாகவும் உள்ளது.

மஞ்சள் சளி: மஞ்சள் சளி வருவதற்கு குளிர் அல்லது தொற்று மோசமாகிறது என்பதே காரணம். இந்த வகை‌ சளியானது குறைந்தது இரண்டு வாரங்கள் இருக்கும்.

சிவப்பு சளி: நம் சளியில் ரத்தம் இருப்பதும், சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் சளி காணப்படும். தொற்றுநோயால் ஏற்படும் மூக்கடைப்பை குறிக்க சிவப்பு நிறம் உள்ளது.

சளியின் காரணங்கள்:

சளியானது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோயாகும். நமக்கு சளி இருந்தால் பேசும்போது சுவாசத்தின் வழியாக உமிழ்நீரானது எளிதில் பரவுகிறது. இதனால், மற்றவர்களும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. அதனால் நமக்கு சளி தொற்று இருந்தால் பொது இடங்களுக்கோ வேலைக்கு செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

ஹைப்போதைராய்டிசம்: நம் உடலின் பல்வேறு இயக்கங்களை தைராய்ட் ஹார்மோன் சுரப்பி செய்கிறது. இதன் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் சரியாகிறது. வளர்சிதை மாற்றத்தின் அளவு குறைவதால் உடல் வெப்பநிலை குறைந்து சளி ஏற்டுகிறது.

ஒவ்வாமை: தூசி மாசுக்கள் ஆகியவற்றை சுவாசிப்பதாலும் உடலிற்கு ஒத்துழைக்காத குளிர்ந்த தண்ணீர், பானங்கள், உணவுகளை சாப்பிடுதல் போன்றவற்றாலும் சளி ஏற்படுகிறது.

ரைனோவைரஸ்: இவை நம்மில் பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தி சளியை உண்டாகும். இவை எப்பொழுதாவது தான் கடுமையாக நோய்த்தொற்றை உண்டாக்கும்.

நீர்ச்சத்து குறைபாடு: நமது உடலில் நீர்ச்சத்தி சரியான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கு முடியும். இவை குறைவாக இருக்கும்போது சளியை உண்டாக்கும்.

குறைந்த உடல் எடை: நம் உடலில் கொழுப்பு படிதல் அதிகரித்தாலோ அல்லது நல்ல கொழுப்பு அமிலங்களின் அளவு குறைந்த இருத்தலால் சளி ஏற்படுகிறது. குறைந்த உடல் எடை உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

ரத்த ஓட்டம்: நமது உடலில் நுரையீரல் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட இடங்களில் ரத்தம் குறைவதால் சளி ஏற்படுகிறது.

சைனஸ்: சைனஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாகவே அதிக அளவில் சளியால் பாதிக்கப்படுகின்றன.

குளிர்காலம்: குளிர்காலத்தில் வெளியில் செல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பதால் நோய்யெதிர்ப்பு சக்தி குறைகிறது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்று: சளியானது நமது உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்த்தொற்று இருந்தாலும் ஏற்படுகிறது.

தூக்கமின்மை: போதிய அளவு தூக்கமின்மையும் அடிக்கடி சளி வருவதற்கும் சளி குறையாமல் இருப்பதற்கும் காரணமாகும்.

அனீமியா: நமது உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாததை அனீமியா ஏற்படுகிறது. இதன் முதன்மை அறிகுறியே சளி தான்.

ஆஸ்துமா: ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய் அலர்ஜி ஆகும். இதனால் சளியின் உற்பத்தி அதிகரிக்கிறது.

மூச்சுக்குழாய் அல்ர்ஜி: மூச்சுக்குழாய்யில் ஏற்படும் அல்ர்ஜியானது சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும்.

புகை பிடித்தல்: புகை பிடிப்பதால் வெளிப்படும் புகையானது சுவாசக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தி சளியை உண்டாக்குகிறது.

நுரையீரல் சிஸ்டிக் பைப்ரோசிஸ்: நுரையீரல் சிஸ்டிக் பைப்ரோசிசாள் நுரையீரலில் தடித்த மற்றும் ஓட்டும் சளியை உற்பத்தி செய்கிறது.

சளியின் அறிகுறிகள்:

நாம் பொதுவாகவே வைரஸ் சளியால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை அறிகுறிகள் தென்படும்.

  • தலை வலி ஏற்படுதல்.
  • சளியின் ஆரம்ப காலத்தில் மூக்கு ஒளுகுதல் ஏற்படும்.
  • அடிக்கடி சளி மற்றும் தும்மல் வருதல். குளிர்ச்சியான உணர்வு ஏற்படும்.
  • ஈரமான மற்றும் உற்பத்தி இரும்பல் ஏற்படுதல்.
  • தூங்குவதில் சிரமம்.
  • காய்ச்சல் இருப்பதாக உணர்வு ஏற்படும் மற்றும் லேசானதாக காய்ச்சல் ஏற்படும்.
  • மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்.
  • வாசனை உணரும் திறனை இழத்தல்.
  • கண்களில் அழுத்தம், கன்னம் மற்றும் முகம் வீங்கி காணபடுதல்.‌
  • எப்பொழுதும் பலவீனம் மற்றும் சோர்வாகவே இருத்தல்.
  • தொண்டையில் புண் மற்றும் எரிச்சல் ஏற்படும்.
  • தசை வலி மற்றும் பசியின்மை.
  • வேகமாக இதயத்துடிப்பு,வாந்தி மற்றும் குமட்டல் போன்றவை சளியின் அறிகுறியாகும்.

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்:

சளியை போக்குவதற்கென குறிப்பிட்ட மருந்துகள் இல்லை. பழங்காலத்தில் அனைவருமே இயற்க்கை மூலிகைகளை பயன்படுத்தியே சளியை குணபடுத்தினர். இவை, சிறிது நாட்களிலே தானாகவே சரியாகிவிடும். சளிக்கான அறிகுறிகள் குறைவாக இருக்கும்போது வீட்டிலேயே விரைவில் குணப்படுத்தலாம். இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்போது மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்
  1. மஞ்சள்: சளியை குணப்படுத்துவதில் மஞ்சள் சிறந்த மருந்தாகும். கொதிக்கவைத்த பால் அல்லது தண்ணீரில் மஞ்சளை கலந்து குடிப்பதன் மூலம் சளி குணமாகும்.
  2. சூடான பானங்களை குடித்தல்: குளிர் காலத்தில் மற்றும் சளி அதிகமாக இருக்கும்போது பானங்களை சூடாக குடிப்பது உடலின் வெப்பநிலைமையை சமன்படுத்துகிறது. பச்சை தேயிலை மற்றும் காய்கறி சூப்களை அதிக அளவு குடிக்கலாம்.
  3. தேன்: தேனானது நிறைய மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் ஜலதோஷம் குறைகிறது.
  4. இஞ்சி: இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இஞ்சியினை அதில் உள்ள ரசாயனம் காரணமாக சுவாசப்பாதைகளை தளர்த்த உதவுகிறது. எனவே, இஞ்சியினை பச்சையாகவோ அல்லது இஞ்சி தேனீராகவும் குடிப்பதன்மூலம் சளி விரைவில் குணமாகும்.
  5. கருப்பு மிளகு: இதில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. கருப்பு மிளகை நசுக்கி எடுத்து கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து குடிப்பதன்மூலம் சளி குணமாகும்.
  6. கடுகு எண்ணெய்: சளி நிவாரணத்திற்காக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் சிறிதளவு பூண்டு சேர்த்து 10 வினாடிகள் கழித்து உபயோகிப்பதன் மூலம் சளி குணமாகும்.
  7. கசாயம்: சளியை போக்க கசாயத்தை தயாரித்து குடிக்க வேண்டும். இந்த கசாயத்தில் மஞ்சள், துளசி, இலவங்கப்பட்டை, இஞ்சி ஆகியவற்றினை சேர்த்து கொதிக்க விட்டு சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும்.
  8. கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் சளி விரைவில் குணமாகும்.
  9. தூதுவளை: தூதுவளையில் உள்ள மருத்துவ குணங்கள் சளியை உடனடியாக குறைக்கும் தன்மை உடையது. தூதுவளையை ரசமாக வைத்து வெறும் வயிற்றில் குடிப்பதன்மூலம் சளி இருந்த இடமே தெரியாமல் குணமாகிவிடும்.
  10. துளசி: துளசியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறிதளவு துளசி இலைகளை எடுத்து வாயில் போட்டு நன்கு மெல்லுவதன் மூலம் சளி விரைவில் குணமாகும்.
  11. அதிமதுரம்: நாம் அதிமதுரத்தை பயன்படுத்துவதால் நமது சுவாசக்குழாயில் அதிக அளவு உற்பத்தியாகும் சளியை குறைக்க முடியும்.
  12. சீந்தில்: சீந்தில் இலைகள் புகைப்பணியால் ஏற்படும் ஒவ்வாமையை எதிர்த்து சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்துகிறது.
  13. எலுமிச்சை: சளியின் அறிகுறிகளை முற்றிலும் குறைப்பதில் எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு குடிப்பது சளியை விரைவில் குணமாக்கும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
  14. திப்பிலி: திப்பிலியானது சளியை குணப்படுத்த பெரும் பங்கு வகிக்கிறது. இவை சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் நிவாரணம் அளிக்கிறது. ஒரு ஸ்பூன் தேனுடன் திப்பிலி பொடியை சேர்த்து சாப்பிடுவதன்மூலம் சளி குறைகிறது.

சளியை குறைக்க செய்ய வேண்டியவை:

சளியை குறைக்க செய்ய வேண்டியவை
  • குளிர்ச்சியான உணவுகளை உண்பதை தவிர்த்து காரமான உணவுகளை உண்ணுங்கள்.
  • கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
  • தினந்தோறும் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
  • மனஅழுத்தத்தால் நோயெதிர்பு சக்தி குறைந்து சளி வரலாம். எனவே, மனஅழுத்தத்தை குறைக்க வேண்டும்.
  • பால், தயிர், இனிப்பு பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • வைட்டமின் சி, துத்தநாகம் நிறைந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.
  • உடலிற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • சளி வரும்போது சளியை வெளியிடவும். அதனை அப்படியே உள்ளிழுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்காலத்திலும் எப்பொழுதும்போல தண்ணீர் பருக வேண்டும்.
  • உடலிற்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும்.
  • அவ்வப்போது வெந்நீரினால் வாய் கொப்பளிப்பதன் மூலம் சளியானது குறையும்.
  • குளிப்பதற்கு வெதுவெதுப்பான வெந்நீரை பயன்படுத்தவும்.
  • செல்லப்பிராணிகளிடம் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • நீராவியால் ஆவி பிடிப்பதன் மூலம் சளியானது குறையும்.
  • நமது மூக்கை சுற்றி சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் குடுத்தல்.
  • புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • சளி இருக்கும்பொழுது சூடான பானங்களை எடுத்து கொள்ளுங்கள்.
  • ஒரு வாரத்தில் குறைந்தது 5 நாட்களது உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்

Leave a comment