• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions
Tuesday, June 24, 2025
BFH News
No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Health Tips

இளமையிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது? மற்றும் வெள்ளை முடி போக்க வழிகள் ….

Tamizharasan k by Tamizharasan k
May 11, 2025
in Health Tips
488 5
0
வெள்ளை முடி போக்க வழிகள
739
SHARES
3.5k
VIEWS
Share on Facebookhttps://www.facebook.com/profile.php?id=100018092919880Share on Twitterhttps://wa.me/qr/5HR2IDPTWT5YF1

இன்றைய வளர்ந்துவரும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி பொதுவாகவே வயதாகும்போது வருகின்றன. பழங்காலத்தில் வெள்ளைமுடி வந்தாலே அதை முதுமையும் நிலை என்றே அனைவரும் கருதுவர். இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதினருக்கு கூட வெள்ளை முடி இருக்கின்றது.

மெலனின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மெலனின் அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே முடி கருப்பாக இருக்கும். நம் தலைமுடிக்கு நிறத்தை கொடுக்கும் நிரமியே மெலனின் ஆகும். இவை தலை முடிக்கு மட்டுமல்லாமல் தோல் கண் போன்றவகைகளுக்கும் நிறத்தை கூடுகின்றது.

READ ALSO

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

முழுமையான நிறமி இழப்பையே வெள்ளை முடி என்கின்றோம். இதற்கு மரபணுக்கள், மனஅழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் ஆகியவை வெள்ளை முடி ஆரம்பத்திற்கான அறிகுறிகளாகும்.

நம்மில் பலர் வெள்ளை முடியை மறைக்க ரசாயனத்தாலான கலவைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் விரைவில் வறட்சி அடைகின்றன. அதிலும் சிலர் வெள்ளை முடியை கையாலே பிடிங்கி எரிந்து விடுகின்றன. உச்சந்தலையில் சேதம் மட்டுமே இதன் விளைவாக ஏற்படுகிறது.

நம்மால் முடிந்த வரை இயற்கையான முறைகளை பின்பற்றியே வெள்ளை முடியை கருமையாக்க வேண்டும். முடி நறைப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமே இருந்தாலும் அதற்கு என்ன காரணம்‌ மற்றும் எப்படி தடுப்பது என்பதை பார்க்கலாம்.

Table of Contents

  • இளமையில் வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்:
  • வெள்ளை முடி போக்க வழிகள்:
  • முடி வெள்ளையாவதை தடுக்க தவிர்க்க வேண்டியவை:

இளமையில் வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள்:

நம் தலை முடி முதலில் கருப்பு நிறத்திலிருந்து பழுப்பு, சாம்பல் மற்றும் பொன்னிறம் போன்ற நிறங்களாக மாறுகின்றன. இவையே வெள்ளை முடியாக காலப்போக்கில் மாறுகின்றன. இவை வயதான பிறகு நறைப்பது எளிது. ஆனால், முன்கூட்டியே நறைப்பது நல்லது அல்ல.

இன்றைய காலக்கட்டத்தில் சிறு வயதினர் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. என்னென்ன காரணங்களால் இவை ஏற்படுகின்றன என்பதை நாம் கண்டறிந்தால் இதனை தடுக்கலாம்.

  • மரபணுக்கள்: நம் பெற்றோர்கள், பாட்டி அல்லது தாத்தா ஆகியோருக்கு ஆரம்பகால வெள்ளை முடியின் காரணமாக கூட இவை வருகின்றது. அதாவது நம் பெற்றோர்களுக்கு சிறு வயதிலே வெள்ளை முடி இருக்குமேயானால் நமக்கும் சிறு வயதில் இருந்தே வெள்ளை முடி வர ஆரம்பிக்கிறது. இதனை நம்மால் முற்றிலுமாக மாற்ற முடியாது. நம் மரபணுக்கள் தான் முடி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதன் விளைவாகவே கருப்பு நிற முடி வெள்ளை நிறமாக மாறுகின்றது. ஆரம்பகால சாம்பல் நிறத்திற்கு முதன்மை காரணங்களான மரபியல் காரணங்கள் சரியாக கண்டறிய படவில்லை. மெலனின் சரியாக உற்பத்தி செய்தல் அல்லது செய்யாமைக்கு முக்கிய பங்கு மரபணுக்களுக்கே உள்ளது.
  • மனஅழுத்தம்: நம் வாழ்வில் மனஅழுத்தம் தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது. நம் குடும்ப வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தாலும் வேலை இருந்தாலும் அல்லது எதையாவது ஒன்றை நினைத்து அதிக சோகத்தில் இருந்தாலும் மனஅழுத்தம் விரைவில் வந்தடையும். இதன் விளைவாகவே வெள்ளை முடி ஏற்படுகிறது. நமது முடியில் உள்ள நிறமி செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே மனஅழுத்தம் தான். இவையே காலப்போக்கில் ஆரம்பகால வெள்ளை முடியை தூண்டுகிறது. நம் உடல் மனஅழுத்தத்தில் உள்ளபோது தான் நிரம்பிய கடத்திகளை வெளியிடுகின்றது. இதன் விளைவாக சாதாரண நிலையில் கூட புதிய முடிகளை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் செயல்படாமல் இருக்கின்றன.
  • புகை பிடித்தல்: எளிதில் வெள்ளை முடி வருவதற்கு புகை பிடித்தலும் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கிறது. இதன் விளைவாக முடி மற்றவர்களை விட சீக்கிரமாகவே வெள்ளை ஆகின்றன. நம் 30 வயதிற்கு முன்பே புகை பிடிப்பதால் வெள்ளை முடி மட்டும் அல்லாமல் நுரையீரல் போற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. புகைபிடிப்பவர்களை புகை பிடிக்காதவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் வெள்ளை முடி வருவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு புகைப்பிடிப் பவர்களுக்கே உள்ளது.
  • வைட்டமின் குறைபாடுகள்: முடி வெள்ளையாவதற்கு வைட்டமின் குறைபாடுகளும் காரணமாக உள்ளது. ஆய்வு ஒன்றில் கால்சியம் மட்டும் வைட்டமின் போன்றவை குறைவாக உள்ளதால் வெள்ளை முடி வருகின்றது என கண்டறிய பட்டது. முன்கூட்டியே நரை முடி தாமிரம், துத்தநாகம் குறைபாடு மற்றும் இரும்பு குறைபாட்டுடன் தொடர்புடையது. பொதுவாகவே வைட்டமின் பி குறைபாடுகள், போலிக் அமிலம் மற்றும் பயோட்டின் குறைபாடுகளுடன் தொடர்புடையன என கண்டறியப்பட்டது.
  • ஆட்டோ இம்யூன் நிலைமைகள்: நம் உடலில் அசாதாரண நோய் எதிர்ப்பு சக்தியால் வெள்ளை முடி உண்டாகின்றது. முடி வெள்ளை நிறமாக இது காரணமாகின்றது. இதன் வடிவமே முதலில் முடியை வெள்ளை நிறமாக மாற்றுகின்றது.
  • தைராய்டு கோளாறு: ஹைப்போ தைராய்டியம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற ஆரம்பகால நிலைமைகளால் வெள்ளை முடி வரலாம். தைராய்டு வெள்ளை முடிக்கு முக்கிய காரணமாக இல்லாவிட்டாலும் இதுவும் வெள்ளை முடிக்கு காரணமாகவே இருக்கிறது. இவை சில சமயங்களில் முடி உதிர்தலுடன் தொடர்புடையவை. தைராய்டு சமநிலைமையில் இல்லாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது மெலனின் அளவை குறைத்து முடி வெள்ளை வருவதற்கு வழிவகுக்கின்றது.

வெள்ளை முடி போக்க வழிகள்:

வெள்ளை முடி போக்க வழிகள்

1.கொய்யா இலை மற்றும் கற்றாழை:

கொய்யா இலையை பயன்படுத்துவதால் வெள்ளை முடி கருப்பு நிறமாக மாறுகின்றது. பொதுவாகவே கொய்யாபழங்களை விட கொய்யா இலைகளில் அதிக அளவு சத்தான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கற்றாழையின் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இவை இரண்டுமே முடி கருமையாக மாற உதவுகின்றது.

முதலில் கொதிக்கும் தண்ணீரில் 8 முதல் 10 கொய்யா இலைகளை எடுத்து கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பின்னர், இதை நன்றாக அரைத்து ஒரு கலவையாக எடுத்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் சம அளவு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். இதில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணையை கலந்து விடவும். இறுதியில் இந்த கலவையை நம் தலையில் நன்றாக தடவவும் குறிப்பாக வெள்ளை முடி இருக்கிற இடத்தில முழுவதுமாக தடவவும்.

இதை குறைந்தது 4 மணி நேரம் அப்படியே தலையில் விடவும். பின்னர், லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை முடியை கருமையாக்க முடிகிறது.

2.மருதாணி மற்றும் காபி:

மருதாணி ஒரு இயற்கையான பழமையான முறை ஆகும். இது இயற்கையாக முடிக்கு நிறத்தை தருகிறது. இதனுடன் காபியையும் சேர்ப்பதால் வெள்ளை முடி நீங்கி கருமை முடியை பெற முடியும்.

ஒரு தேக்கரண்டி காபி பொடியை கொதிக்கும் நீரில் போடவும். இதனை ஆறவைத்து மருதாணி தூள் கலந்து நன்றாக கலவையாக்கவும். ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை இதில் விட்டு நன்றாக கலந்து தலையில் முழுவதுமாக தடவவும். இதனை ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடவும்.

3.கறிவேப்பிலை:

கறிவேப்பிலையில் வைட்டமின் பி நிறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மயிர்க்கால்களில் உள்ள மெலனினை மீட்டெடுக்க உதவுவதோடு இல்லாமல் வெள்ளை முடியை குறைத்து முடி கருமையாக வளர உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணையை ஒற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு கப் அளவு கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர், இதனை நன்றாக ஆறவிட்டு வடிகட்டி எண்ணெயை எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவி மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு நாள் தலையில் விட்டு அடுத்த நாள் தலையை கழுவி விடவும்.

4.நெல்லிக்காய் மற்றும் மேத்தி விதைகள்:

வெள்ளை முடி மறைய இயற்கையாகவே நெல்லிக்காய் மற்றும் மேத்தி உதவுகிறது. வைட்டமின் சி அதிக அளவில் நெல்லிக்காய் அல்லது இந்தியா நெல்லிக்காயில் உள்ளது. முடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் தீர்வு குடுக்கிறது.

அதேபோல், மேத்தி விதைகளும் நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டது. இந்த இரண்டும் சேர்த்த கலவையானது முடி வெள்ளையாவதற்கு முன்பே அதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணை விட்டு அதில் 6 முதல் 8 நெல்லிக்காய் துண்டுகளை போடவும்.ஒரு தேக்கரண்டி வெந்தய பொடியை இதில் கலக்கவும். பின்னர், இதை நன்றாக கொதித்த பிறகு வடிகட்டி ஆர விடவும். வடிகட்டிய கலவையை இரவில் உச்சந்தலை முதல் தலையில் அனைத்து பகுதிகளிலும் நன்றாக தடவி விடவும். அடுத்த நாள் காலையில் எழுந்து லேசான மூலிகை ஷாம்பூவை பயன்படுத்தி கழுவி விடுவதன் மூலம் முடி கருமையாக வளரும்.

5.கருஞ்சீரகம்:

முடியை கருமையாக்குவதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவை, நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய்பொடி, ரீத்தா மற்றும் சீகைக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் கலந்து இரவு முழுவதும் ஊர விடவும். அதன்பிறகு, கருஞ்சீரகத்தை தனியாக வறுத்து அதை ஆறியதும் அரைத்து கொள்ளவும். பின்னர், முன்பே செய்த கலவையில் இந்த கருஞ்சீரக பொடியை சேர்த்து கலவையாக கலக்கவும். இந்த கலவையை தலை முடியில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் கழித்து தலையை லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும்.

6.பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

வைட்டமின் ஏ பாதம் எண்ணையில் அதிக அளவு உள்ளது. இது முடிகளின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல் முடி வெள்ளையாவதை முன்கூட்டியே தடுக்கிறது. அதேபோல் எலுமிச்சை சாறு முடிக்கு பலபலப்பையும் ஆரோக்கியமான வளர்ச்சியையும் தருகிறது.

பாதம் எண்ணெய் 2 தேக்கரண்டி மற்றும் எலுமிச்சை சாரை 3 தேக்கரண்டி என்ற விகிதத்தில் எடுத்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தலை முடி முழுவதுமாக நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர், 30 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பூ கொண்டு கழுவி விடுவதன் மூலம் முடி வெள்ளையாவதை தடுத்து கருமையாக மாற வழிவகுக்கும்.

முடி வெள்ளையாவதை தடுக்க தவிர்க்க வேண்டியவை:

  1. நம் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கூட முடியின் நிறத்தை மாற்ற முடிகிறது.
  2. முடிந்த வரை மனஅழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க நினைத்தல்.
  3. புகை பிடிப்பதை தவிர்த்தல்.
  4. சமச்சீரான உணவை உண்ணுதல்.
  5. நல்ல முடி பராமரிப்பு பழக்கங்களை செய்வதன் மூலம் ஆரம்பகால வெள்ளை முடியை கருமையாக மாற்றி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
  6. ரசாயன நிறங்களை போடாமல் இருந்தால் முடி ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் இருக்கும்.
  7. அதேபோல், முடி தரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர புறஊதா கதிர்கள் மற்றும் மாசு போன்ற தீங்கு விளைவிக்கும் சுற்றுசூழல் காரணிகளில் இருந்து தலைமுடியை பாதுகாக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல் கட்டுரைகளை படிக்க Blog For Health இணையத்தளத்தில் பார்க்கவும்.

Related Posts

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
Animal Disease

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

June 23, 2025
இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
Desease

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது

June 23, 2025
புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்
Awareness

புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

June 23, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி
Awareness

போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

June 23, 2025
Next Post
30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

Natural remedies for menstrual pain

மாதவிடாய் வலிக்கு இயற்கை மருந்துகள்

June 17, 2025
தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

June 7, 2025
விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
நகத்தின் நிறம் மாற காரணம்

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

மதுவினால் மனிதருக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சில மருத்துவ ஆலோசனைகள்

June 23, 2025

EDITOR'S PICK

இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

June 7, 2025
ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

May 25, 2025
புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

June 23, 2025
பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

June 23, 2025

BFH News

Categories

  • Animal Disease
  • Awareness
  • Desease
  • Epidemic
  • Health Tips
  • Lifestyle
  • Virus Desease

Recent Posts

  • விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
  • தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்
  • பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
  • இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions

Copyright (c) 2025 BFH News All Right Reseved

No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு

Copyright (c) 2025 BFH News All Right Reseved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In