தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய்கள் என்பது பாக்டீரியா,வைரஸ்,பூஞ்சை அல்லது புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. இவற்றை ஆங்கிலத்தில் “Infectious Diseases”அல்லது Communicable Diseases என்று கூறுவர்.

பொதுவான தொற்று நோய்கள்:

வைரஸ் நோய்கள்– ஜலதோஷம், காய்ச்சல், எபடைட்டீஸ், மருக்கள்

பாக்டீரியா நோய்கள்– தொண்டை அயர்ச்சி, சிறுநீர் பாதை தொற்றுகள், சால்மோனெல்லா

பூஞ்சை நோய்கள்-ரிங்வோர்ம், தடகள கால், சில தோல் நோய்கள்

ஒட்டுண்ணி நோய்கள்– மலேரியா,டெங்கு சில குடல் நோய்கள்.

தொற்று நோய் பரவும் விதம்:  

  • சுவாசம் மூலம்: தும்பல்,இருமல் போன்ற செயல்களால் காற்றில் பரவி அருகில் இருக்கும் மற்றவர்களுக்கு இது பாதிப்பாக அமைகிறது. 
  • உடல் தொடர்பு மூலம்: நோயாளியுடன் நேரடி தொடர்பு கொள்வது மற்றும் நோயாளிகளுடன் இணைந்து இருத்தல் போன்றவர்களால் பரவுகிறது.
  • நீர் மற்றும் உணவின் மூலம்: அசுத்தமான நீர் மற்றும் உணவு உட்கொள்வதன் மூலம் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. 
  • கொசு பண்ற பூச்சிகள் மூலம்: டெங்கு, மலேரியா மற்றும் இது போன்ற கொசுக்களால் தொற்று நோய்கள் அதிகம் பரவுகிறது.

தொற்று நோய் அறிகுறிகள்: 

  • காய்ச்சல்,சளி, இருமல்,தும்மல் 
  • உடல் சோர்வு,தசை வலி
  • வயிற்றுப்போக்கு,வாந்தி 
  • சொரி சிரங்கு,கை வலி,மூட்டு வலி
  • தலைவலி
  • தோல் அரிப்பு

தடுக்கும் முறைகள்: 

தொற்று நோய்களைத் தடுக்கும் வழிகள்

  • தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது
  • சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிப்பது
  • சுகாதாரமான சுற்றுப்புறத்தை பேணுவது
  • நோய் தொற்று உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பது
  • சத்தான உணவை உட்கொள்ளுதல்
  • கைகளை அடிக்கடி கழுவுதல்
  • தூய்மையான உணவு மற்றும் நீரை குடித்தல்
  • மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ், ஆன்டிவைரல்ஸ்)

தொற்று நோய்களை புரிந்து கொள்வது எப்படி?

தொற்று நோய் என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் உடல் கோளாறாகும்.
மனித உடலில் வாழும் பல உயிரினங்கள் பெரும்பாலும் பாதிப்பு இல்லாதவை, ஆனால் குறிப்பிட்ட சில நிபந்தனைகளில், சில உயிரினங்கள் நமக்கு பல நோய்களை ஏற்படுத்தலாம்.

பல தொற்று நோய்கள் ஒருவர் முதல் இன்னொருவருக்கு பரவுகின்றன.
சிலவற்றை விலங்குகள் அல்லது பூச்சிகள் கடித்தல் மூலம் பரப்பக்கூடியவை.
மற்றவை அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் பயன்படுத்துவதால், அல்லது சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளின் மூலமாக பரவுகின்றன.

அறிகுறிகள்:
ஒரு தொற்று நோயின் அறிகுறிகள், நோய் விளைவிக்கும் உயிரினத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
பொதுவாக, அதிக சோர்வு மற்றும் காய்ச்சல் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படும்.

நோய் பரவும் வழிகள்:

  • பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை நேரடி தொடர்பினால் (தொட்டல், முத்தமிடல், தும்முதல்) பரவும்
  • உடலுறவு அல்லது உடல் திரவங்களின் பரிமாற்றம்
  • பாதிக்கப்பட்ட நபர் கேரியராக இருந்து அறிகுறிகள் இல்லாமல் மற்றவர்களுக்கு நோய் பரப்பலாம்
  • பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், கீறல் அல்லது அதன் கழிவுகளை கையாளுதல்
  • கர்ப்பிணி பெண் தனது குழந்தைக்கு கிருமிகள் பரிமாற்றுவது
  • மேசை மேற்பரப்பு, கதவு கைப்பிடி, குழாய் கைப்பிடி போன்ற பொருட்களால் பரவுதல்
  • கொசு, பேன், உண்ணி போன்ற பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள்
  • அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுதல்

சிகிச்சை:

  • பாக்டீரியா தொற்றுகளுக்கு நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாட்டிக்ஸ்)
  • வைரஸ் தொற்றுகளுக்கு சில மருந்துகள் உதவும்
  • பூஞ்சை தொற்றுகளுக்கு மேற்பூச்சி பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்
  • மலேரியா போன்ற ஒட்டுண்ணி தொற்றுகளுக்கு மருந்துகள் இருந்தாலும், சிலவை மருந்து எதிர்ப்பு வளர்த்துள்ளன

முடிவுரை:
தொற்று நோய்கள் நமது உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உடனடி மருத்துவ சிகிச்சை விரைவில் குணமடைவதற்கான வழி.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” – அதனைப் பின்பற்றி அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

Leave a comment