தவறான பயன்பாட்டினால் துன்பத்திற்கு உள்ளான குழந்தைகளை கண்காணித்தல், மதிப்பிடுதல் மற்றும் வழிமுறைகள்:
குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline)
சமூக பணியாளர்களை நியமித்து, குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது.

குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல்
உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி, வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அளிக்க வேண்டும்.
குடும்ப ஆதரவு
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
மருத்துவப் பராமரிப்பு
பாலியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட, பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்களிடமிருந்து மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
சட்ட ஆலோசனை
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர் தங்கள் விருப்பப்படி, சட்ட ஆலோசகர் மூலம் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கு உரிமை பெற்றுள்ளனர்.
மேலும் தெரிந்து கொள்வோம்
குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் 2007-இல், குழந்தை உரிமைகள் சட்டம் (CPCR) 2005-ன் கீழ் அமைக்கப்பட்டது.
இந்தச் சட்டம் பொதுவுடைமை, குழந்தை சட்டங்களை மீற முடியாமை, மற்றும் நாட்டில் காணப்படும் குழந்தைகள் தொடர்பான கொள்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பும் சம முக்கியத்துவம் பெறுகிறது.
பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை கொள்கைகளை வடிவமைக்கிறது.
மறுவாழ்வு (Rehabilitation)
பள்ளியில் மீண்டும் சேர்த்து கல்வியைத் தொடரச் செய்வது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வின் முக்கிய அங்கமாகும்.
அந்தக் குழந்தை படிப்படியாக மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வழி இதுவாகும்.
சமுதாய அடிப்படையிலான முயற்சிகள்
- குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்தல்
இது உலகளாவிய முறையில் வலியுறுத்தப்படும் சமூகக் கொள்கையாகும்.
இதனை மேற்கொள்வது பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அறிவுரைகள்:
- சந்தேகமான நபர்கள் அல்லது தெரியாத அந்நியர்களுடன் பேசக்கூடாது, அவர்களிடம் செல்லக்கூடாது.
- தெரியாத நபர்களுடன் தனியாக இருக்கக் கூடாது.
- அரசு அல்லது தனியார் போக்குவரத்து (பேருந்து, ஆட்டோ, ரயில்) பயணங்களில் தனியாகச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- பெற்றோருக்குத் தெரியாமல் எவரிடமிருந்தும் பணம், பொம்மை, பரிசு, சாக்லேட் போன்றவற்றை வாங்கக் கூடாது.
- தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட, யாரையும் உடலில் தொட அனுமதிக்கக் கூடாது.
பொறுப்பான சமூகம்
நம் குழந்தைகள் கண்ணியமான, எந்தவிதமான வன்முறையற்ற, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வது, சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பு ஆகும்.