உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம்
பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை.
சோர்வுக்கான முக்கிய காரணங்கள்:
தூக்கமின்மை- போதிய ஓய்வு இல்லாமல் இருப்பது சோர்வுக்கு காரணமாக அமைகிறது.
உணவு பழக்கங்கள்- ஊட்டச்சத்து குறைபாடு, நீச்சத்து பற்றாக்குறை.
மன அழுத்தம்- பதட்டம் மற்றும் மனச்சோர்வு.
நாள்பட்ட நோய்கள்- ரத்தசோகை,நீரிழிவு,தைராய்டு கோளாறுகள்.
தொற்று நோய்கள்- மலேரியா காய்ச்சல், ஹெபடைடிஸ்.
உடல் சோர்வின் அறிகுறிகள்:
- தூக்கம் இல்லாமல் இருத்தல்
- ஒவ்வொரு செயலும் கடினமாக தோன்றுதல்
- மனதளவில் சோர்வு
- தசை வலி அல்லது தசை பலவீனம்
- ஒரே நேரத்தில் சிந்திக்க முடியாமை
- தூக்கம் அதிகமாகவோ குறைவாகவோ இருத்தல்
தீர்வுகள் மற்றும் பராமரிப்பு:
போதுமான தூக்கம்:
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்
சத்தான உணவு:
சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும் இரும்பு சத்து விட்டமின் பி12 உள்ள உணவுகள் (சுண்டல்,முட்டை,கீரை )சேர்க்க வேண்டும்.
நீர்மம் பராமரிப்பு:
தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒழுங்கான உடற்பயிற்சி:
தினமும் காலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சி யோகா மற்றும் சில உடற்பயிற்சிகளை செய்வது சோர்வு இல்லாமல் இருப்பதற்கு நல்லது.
மன அழுத்தம் மேலாண்மை:
தியானம்,பிராணயாமம் அரை மணி நேரம் ஓய்வு ஆர்வமான செயலியில் ஈடுபடுதல் மருத்துவ பரிசோதனை:
நிலையான சோர்வு இருந்தால் ரத்தம் மற்றும் ஹார்மோன் சோதனைகளை மேற்கொள்ளலாம்