வைரஸ் நோய்கள் என்றால் என்ன?
வைரஸ் நோய்கள் என்பது வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகும். வைரஸ்கள் மிகச் சிறிய உயிரணுக்கள் ஆகும், அவை மனித உடலில் நுழைந்து நோய்களை ஏற்படுத்துதின்றன.வைரஸ் நோய்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.எனவே மனிதர்கள் வைரஸ் நோய் உடலை தாக்காமல் ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல் சளி போன்றவையும் ஏற்படுகிறது.
முக்கிய வைரஸ் நோய்கள் சில:
1)காய்ச்சல் (Viral Fever) – பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும்.கொசு கடிப்பதன் மூலம் மனித உடலுக்கு ரத்தத்தின் மூலமாக வைரஸ் பரவி காய்ச்சல் ஏற்படுகிறது மற்றும் சில காரணங்களால் மனித உடலுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
2)குளிர் மற்றும் இருமல் – சாதாரண வைரஸ் தொற்றுகளால் ஏற்படும்.
3)காய்ச்சல் மற்றும் சளி – பொதுவாக இன்ப்ளூயன்சா (Influenza) வைரஸால் ஏற்படும்.நீரில் உள்ள மனித கண்களுக்கு தெரியாத வைரஸ்கள் மூலம் காய்ச்சல் மற்றும் சளி ஆகியவை ஏற்பட வேண்டும்
4)கொரோனா வைரஸ்(COVID -19) – உலகளவில் பரவிய வைரஸ் நோய்.இத்தகைய வைரஸ் உலகையே குலுக்கி போட்ட வைரஸ் ஆகும் பெரும்பாலான மக்கள் இந்த வைரஸ்கள் பரவி பாதிக்கப்பட்டு உடல் நலம் சரியில்லாமல் இறப்பதற்கு காரணமாக இந்த வைரஸ் அமைந்தது இது மிகவும் ஒரு கொடூரமான வைரஸ் ஆகும்.
5)ஹெபடைட்டீஸ் (Hepatitis) – கல்லீரல் பாதிக்கும் வைரஸ் நோய்.
6)ஹெர்பிஸ் (Herpes) – தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கும் வைரஸ்.
7)டெங்கு மற்றும் சிக்கன்குனியா – கொசுக்களால் பரவும் வைரஸ் நோய்கள்.இந்த வைரஸ் வைரஸ்கள் உடலை தாக்கும் பொழுது நம் உடல் மிகவும் சோர்வடைகிறது மேலும் உணவை உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.இத்தகைய வைரஸ் ஆனது சாக்கடை,வாகனங்களின் டயர்களில் தேங்கி இருக்கும் மழை நீரில் தேங்கி கொசு உற்பத்தி ஆகி அந்த கொசு ஆனது நம் உடலை தாக்கும் பொழுது வைரஸ் நம் உடலில் பரவி இத்தகைய நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது
வைரஸ் நோய்களின் அறிகுறிகள்:
1.உடல் வெப்பம் அதிகரித்தல்
2.தலைவலி, உடல் வலி
3.சளி, இருமல்
4.வயிற்று கோளாறுகள்
5.தோலில் புண்கள் அல்லது அரிப்பு
வைரஸ் நோய்கள் பரவும் விதம்:
1.நேரடி தொடர்பு – தொற்றுநோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று நோயாளிகளை தொடும்பொழுது மற்றும் அவர்களின் உடையை அணிந்தால் நேரடியாக வைரஸ் நம் உடலுக்கு பிறகு உடல்நல பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.
2.காற்று மூலம் – இருமல் மற்றும் தும்மலின் மூலம் தொற்று நோய் இருக்கும் ஒருவர் தும்பும்போதும் இரும்பும் பொழுதும் வாயை எத்தகைய பாதுகாப்பின்றி தும்பும் பொழுது அருகில் இருக்கும் நபருக்கு வைரஸ் பரவி உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
3.நீர் மற்றும் உணவு – மாசுபட்ட நீர் மற்றும் உணவின் மூலம்.மாசடைந்த நீர் மற்றும் சுத்தம் இல்லாத நீரை பருகும்பொழுதும் மற்றும் கெட்டுப்போன உணவு தொற்று நோயாளிகள் சாப்பிட்ட உணவை சாப்பிட்டால் நம் உடலுக்கு வைரஸ் பரவி நோயைத் தொற்றுக்கு காரணமாக அமைகிறது
4.கொசுக்கள் – டெங்கு, சிக்கன்குனியா போன்றவை.கீழே தூக்கி போடும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் வாகனங்களின் டயர்கள் மேலும் சிலவற்றில் மழை நீர் நிரம்பி அது அதில் கொசு உற்பத்தியாகி மனித உடலை தாக்கும் பொழுது மனித உடலுக்கு வைரஸ் பரவி அவர்களுக்கு உடல் நல பிரச்சனைக்கு காரணமாக அமைகிறது.
தடுப்பு மற்றும் சிகிச்சை:
1.கைகழுவுதல் மற்றும் சுத்தம் பேணுதல்
2.முகமூடி அணிதல்
3.தடுப்பூசி செலுத்துதல்
4.ஆரோக்கியமான உணவு மற்றும் நீர் பருகுதல்
5.மருத்துவரின் ஆலோசனை பெறுதல்.
மனிதனால் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் நோய் எது?
ஆர்த்தோஃப்ளாவி வைரஸ் ஃபிளவி
மஞ்சள் காய்ச்சல் 40-50 nm அகலத்தில் உறைந்த RNA வைரஸ் (YFV),வகை இனங்கள் மற்றும் குடும்பத்தின் பெயர்(Flaviviridae).1900 ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவர் வால்டர் ரீட் என்பவரால் வடிகட்டப்பட்ட மனித சீரம் மற்றும் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய முதல் நோய் இதுவாகும்.