• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions
Monday, June 30, 2025
BFH News
No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Desease

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

bfh@admin by bfh@admin
June 23, 2025
in Desease, Health Tips
488 5
0
இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
739
SHARES
3.5k
VIEWS
Share on Facebookhttps://www.facebook.com/profile.php?id=100018092919880Share on Twitterhttps://wa.me/qr/5HR2IDPTWT5YF1

இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது.

கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி L160 ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது. மேலும் இது திடீரெனத் தோன்றும் இஸ்கிமியா (இதயத் தசைகளுக்கு குறைவான இரத்த ஓட்டம்) மற்றும் இதயத் தசை நசிவுறல் (இதயத் தசை திசுக்களின் இறப்பு) நோய்க்கு வழிவகுக்கிறது.

READ ALSO

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது 200 மிகி/டெசிலி ஆகும். இரக்கத்தில் கொழுப்பின் அளவு 200லிருந்து 300 மிகி/டெசிலி ஆக அதிகரிக்கும் போது இதயக் குழல் (கரோனரி இதய நோய்) நோய்க்கான ஆபத்தும் அதிகரிக்கிறது.

ஆபத்து காரணிகள்

இதய நோய்க்கான முக்கிய காரணம் மற்றும் பங்களிப்புக் காரணிகளாக ஹைபர்கொலஸ்டீரோலீமியா (இரத்த கொழுப்பு அதிகரித்தல்) மற்றும் மிகை இரத்த அழுத்தம் (ஹைபர்டென்சன்) போன்றவை விளங்குகின்றன. இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிடில், மூளை மற்றும் சிறுநீரகங்களில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி இறப்பை ஏற்படுத்தலாம்.

காரணங்கள்

பாரம்பரியம் (குடும்ப வரலாறு), அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவு, உடற்பருமன், வயது அதிகரித்தல், புகை பிடித்தல், உணர்ச்சிவசப்படுதலால் ஏற்படும் மனஅழுத்தம், இயக்கமில்லாத வாழ்க்கை முறை, அதிகளவு ஆல்கஹாலை உட்கொள்ளுதல் மற்றும் உடல் உழைப்பின்மை போன்றவை இதய நோய்க்கான காரணங்களாகும்.

அறிகுறிகள்

மூச்சுத் திணறல், தலைவலி, சோர்வு, தலை சுற்றல், நெஞ்சு வலி, கால் வீக்கம் மற்றும் இரைப்பை குடல் தொந்தரவுகள் போன்றவை இதய நோயின் அறிகுறிகளாகும்.

HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம் ) அல்லது நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL (குறை அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

இதய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உடகொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.

அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும். நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்

நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.

அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்

ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

Tags: heart

Related Posts

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
Animal Disease

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

June 23, 2025
பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
Desease

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

June 23, 2025
நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்
Desease

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

June 23, 2025
இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்
Virus Desease

இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்

June 23, 2025
குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது
Health Tips

குழந்தை வன்கொடுமை எப்படி தடுப்பது

June 23, 2025
Next Post
நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

Natural remedies for menstrual pain

மாதவிடாய் வலிக்கு இயற்கை மருந்துகள்

June 17, 2025
விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

June 7, 2025
நகத்தின் நிறம் மாற காரணம்

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

மதுவினால் மனிதருக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சில மருத்துவ ஆலோசனைகள்

June 23, 2025

EDITOR'S PICK

18 வயதிற்கு பிறகு உயரம் அதிகரிக்க வழிகள் – ஒரு இளம் நபர் உயர النموச்சார்ட் அருகில் நின்று தன்னம்பிக்கையுடன் அளவிடுகிறார்.

18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர ஆசையா? உயரமாக என்ன செய்யலாம் என பார்க்கலாம்!

May 11, 2025
தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

June 7, 2025
தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

June 20, 2025
மூட்டு வலி

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

May 11, 2025

BFH News

Categories

  • Animal Disease
  • Awareness
  • Desease
  • Epidemic
  • Health Tips
  • Lifestyle
  • Virus Desease

Recent Posts

  • விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
  • தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்
  • பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
  • இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions

Copyright (c) 2025 BFH News All Right Reseved

No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு

Copyright (c) 2025 BFH News All Right Reseved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In