உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம் 

பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை.

சோர்வுக்கான முக்கிய காரணங்கள்:

தூக்கமின்மை- போதிய ஓய்வு இல்லாமல் இருப்பது சோர்வுக்கு காரணமாக அமைகிறது.

உணவு பழக்கங்கள்- ஊட்டச்சத்து குறைபாடு, நீச்சத்து பற்றாக்குறை. 

மன அழுத்தம்- பதட்டம் மற்றும் மனச்சோர்வு. 

நாள்பட்ட நோய்கள்- ரத்தசோகை,நீரிழிவு,தைராய்டு கோளாறுகள். 

தொற்று நோய்கள்- மலேரியா காய்ச்சல், ஹெபடைடிஸ்.

 உடல் சோர்வின் அறிகுறிகள்:

  • தூக்கம் இல்லாமல் இருத்தல் 
  • ஒவ்வொரு செயலும் கடினமாக தோன்றுதல் 
  • மனதளவில் சோர்வு 
  • தசை வலி அல்லது தசை பலவீனம் 
  • ஒரே நேரத்தில் சிந்திக்க முடியாமை
  • தூக்கம் அதிகமாகவோ குறைவாகவோ இருத்தல்

 தீர்வுகள் மற்றும் பராமரிப்பு:

போதுமான தூக்கம்: 
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்
சத்தான உணவு:
சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும் இரும்பு சத்து விட்டமின் பி12 உள்ள உணவுகள் (சுண்டல்,முட்டை,கீரை )சேர்க்க வேண்டும்.
நீர்மம் பராமரிப்பு:
தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒழுங்கான உடற்பயிற்சி:
தினமும் காலையில் எழுந்தவுடன் நடைப்பயிற்சி யோகா மற்றும் சில உடற்பயிற்சிகளை செய்வது சோர்வு இல்லாமல் இருப்பதற்கு நல்லது.
மன அழுத்தம் மேலாண்மை:
தியானம்,பிராணயாமம் அரை மணி நேரம் ஓய்வு ஆர்வமான செயலியில் ஈடுபடுதல் மருத்துவ பரிசோதனை:
நிலையான சோர்வு இருந்தால் ரத்தம் மற்றும் ஹார்மோன் சோதனைகளை மேற்கொள்ளலாம்

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *